இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 ​​தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக இலங்கை சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் போது பயனுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

பரிஸ் குழுமம் உள்ளிட்ட தரப்புக்கள் யோசனை முன்வைப்பதற்கு இருந்த வாய்ப்புக்கள் மூலம் பயன்பெறாத எதிர்க்கட்சி பொது எதிர்ப்பை மாத்திரம் காட்டுவது கவலைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor