அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியில் ரித்திதென ஜெயந்தியாய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்
வறிய மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் இத்திட்டத்தை ரித்திதென மற்றும் ஜெயந்தியாய மக்களுக்காக ஜெயந்தியாய கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரஹீம் நெறிப்படுத்தியிருந்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் அவர்கள் பெண்கள் பணிப் பெண்களாக வௌிநாடு செல்லக் கூடாது என்ற கொள்கைக்கு அமைய இவ்வாறான சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கைகளை தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து முன்னெடுத்து வருவதாகவும் அதில் வெற்றி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.