ஐரோப்பா ஜேர்மன் நாட்டில் ஹம் எனும் பதியில் கோவில் கொண்டுள்ள திருநல்லூர் ஶ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் 14.ம்திகதி. வெள்ளிக்கிழமை. மாலை விநாயகர் வழிபாடு கிராமசாந்தி , வாஸ்துசாந்தி ஆகிய பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 15.07.2023. சனிக்கிழமை துவஜாரோஹணம் .. கொடியேற்றத்துடன் தொடர்ந்து 10.நாட்களுக்கு மஹோற்சவம் நடைபெறவுள்ளது .. மேற்படி ஆலய மஹோற்சவத்தை நடாத்திவைப்பதற்காக சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர். ..மஹாராஜ ராஜகுரு ….ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்கள். நேற்று புதன்கிழமை. ஜேர்மன் நாட்டிற்கு பயணமானார். 20.நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் குருபீடாதிபதி ,பிரான்ஸ். சுவிஸ் , டென்மார்க் .. நாடுகளுக்கும் சென்று ஆன்மீக பணியாற்றி நாடுதிருப்புவார் ..கடந்த 24.வருடங்களாக. உலகளாவிய ஈதியில், மலேசியா , சிங்கப்பூர் , கனடா, லண்டன் , ஜேர்மன் , சுவிற்ஷர்லாண்ட், , பிரான்ஸ் , நோர்வே , டென்மார்க் , ஆகிய நாடுகளில் ஆன்மீக உரைகள் ஆலய கும்பாபிஷேகங்கள். .. சபரிமலை ஶ்ரீஐயப்பசுவாமி மலையாளபூஜை உற்சவங்களை நடாத்திவருபர் என்பது குறிப்பிடத்தக்கது…..

