இலங்கையில் அரச வங்கிகள் நிலை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வைப்பாளர்களின் வட்டியை கூட செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில சமயங்களில் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட பணம் கூட வராமல் போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி இராஜகிரியவில் உள்ள தேர்தல் தலைமைச் செயலகத்தை தேசிய மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கோரி மாவட்ட மட்டத்தில் பாரிய பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.