இலங்கை எரிபொருளில் விரைவில் ஏற்பட இருக்கும் மாற்றம்!

முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை விரைவில் இலங்கையில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தில் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளது.

சினோபெக்கிற்கு நாட்டில் இயக்கப்படும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படும்.

இதுதவிர இரண்டு வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு நாட்டில் செயல்பட அனுமதி வழங்கப்படவுள்ளது.

தற்போது ​​அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களே நாட்டில் எரிபொருள் விநியோகஸ்தர்களாக உள்ளன.

இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதும் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின்படி ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய நிலையான விலை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். இருப்பினும், விரைவில் கடுமையான விலைக் குறைப்பை நாங்கள் எதிர்பார்க்க முடியாது, என்று அந்த தகவல் தரப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான QR குறியீட்டு முறையிலிருந்தும் அரசாங்கம் விரைவில் விலகும் என்றும் அந்த தரப்பு தெரிவித்தது.

இதற்கிடையில் RM Parks-Shell நிறுவனம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை தொடங்கும்.

முக்கிய மசகு எண்ணெய் விநியோகஸ்தரான சவூதி அரேபியா, விநியோகத்தை குறைக்க முடிவு செய்ததால், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor