அக்கரைப்பற்று பஸ்ஸில் போதைப் பொருளுடன் சிக்கிய இந்தியர்

அக்கரைப்பற்று – புத்தளம் செல்லும் பஸ்ஸில் சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மறைத்தி வைத்திருந்தமை பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் நோக்கி கற்பிட்டியில் இருந்துச் சென்ற பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்வதாக பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்றைய தினம் (01-06-2023) அதிகாலை குறித்த பஸ்ஸை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பஸ்ஸினுள்ளே உரைப்பை ஒன்றில் சூட்சுமமான முறையில் சுமார் மூன்று கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மறைத்தி வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சம்பவத்தின்போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த ஐஸ் போதை வியாபாரத்தில் பலர் சம்மந்தப்பட்டிருந்ததாகவும் அவர்கள் வாடகைக் காரொன்றில் பஸ்ஸை பின்தொடர்ந்து வருகை தந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காரில் சென்ற ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது போதை வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்த பிரதான சந்தேக தலைமன்னாரில் இருப்பதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கற்பிட்டி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினால் சாலியவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய தலை மன்னாரில் வைத்து போதை வியாபாரியான பிரதான சந்தேக நபரார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கற்பிட்டி ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அலவ்வ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெருமதி சுமார் 3 கோடிக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஐஸ் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக படகு மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor