மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இடங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் விசேடசெயற்திட்டதிற்கு அமையவும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமையவும் மாநகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பிரதி சனிக்கிழமை தோறும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மட்டக்களப்பு நகரின் கோட்டைபூங்கா வளாகம், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை பூங்கா என்பன சுத்தப்படுத்தப்பட்டதுடன் மட்/ அரசினர் ஆசிரியர் கலாசாலையினை ஊடறுத்து செல்லும் கோட்டைமுனை பிரதான வடிகானும் இதன்போது தூர்வாரப்பட்டது.
இச்சிரமதானப் பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு.நா. மதிவண்ணன் மற்றும் பிரதி ஆணையாளர் திரு. உ.சிவராஜா ஆகியோருடன் சுகாதார பிரிவின் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.