கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவின் மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மாகாணத்தில் தொடர்ந்து வரும் கடுமையான காட்டுத் தீ பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மக்களின் பாதுகாப்பு முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால நிலமை பிரகடனத்தின் ஊடாக அவசர நிதிகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட அதிகாரம் கிடைக்கப் பெறுவதாகவும் இதன் ஊடாக பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் சேவை வழங்கப்பட முடியும் எனவும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிராமிய பகுதிகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்நகர்த்தப்பட்டுள்ளனர்.
தற்பொழுது மாகாணத்தில் 362 இடங்களில் காட்டுத் தீ பரவுகை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 36 இடங்களில் கட்டுக்கு அடங்காத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ காரணமாக சில கட்டடங்கள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளன.