அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (2) அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியின் கூற்றுப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமடையவில்லை கொள்வனவு பெறுமதி ரூ. 314 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 328 ஆகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 310.05 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 327.50 ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 362.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.