வெளிநாட்டில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை மாணவன் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பெலாரஸில் உள்ள மருத்துவ பீடமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை (29.04.2023) மாணவர் விடுதி அறையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவபீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 24 வயதான மருத்துவ மாணவர், அந்த வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி பயின்ற இம்மாணவன் பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவ பீடத்தில் சேர்ந்துள்ளார்.

மாணவனின் தாயார் கடந்த சனிக்கிழமை தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் தொடர்பில் விசாரணை
இதனை தொடர்ந்து மாணவனின் தாயார் தனது மகனின் மருத்துவ நண்பர்கள் பலரை அழைத்து, தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால், அவரை தொடர்புக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சக மருத்துவ மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது இதுவரையில் தெரியவரவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி வரை தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது

Recommended For You

About the Author: webeditor