நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கும், பிரதி சபாநாயகருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
தெற்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையில் கேள்விக்கான நேரம் வழங்கப்படுவதாகவும், ஆனால் வடக்கு – கிழக்கினை பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும் இதற்கு பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறான பக்கசார்பாக அரசாங்கம் நடந்து கொள்வதாலேயே இன்று வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்படுவதாகவும் சாணக்கியன் சபையில் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
எனினும் இறுதிவரை சாணக்கியன் முழுமையாக கருத்து தெரிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று (25.04.2023) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய இன்று காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை விவாதத்தை அடுத்து அனுமதிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.