சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூர பயண ரயில் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடமைகளுக்கு சமூகமளித்துள்ள சாரதிகளை சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கு பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் நாளைய (17) தினத்திலும் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.