குரங்கு ஏற்றுமதி தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவது தொடர்பில் உறுதியான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சீனாவுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் வெளியாகின. அந்தவகையில் இலங்கைக்கே உரித்தான குரங்குகளை பிற நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுற்றாடற்துறை ஆய்வாளர்கள் விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சீனாவுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பில் ஆராய நீதியமைச்சு, விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவது தொடர்பில் இதுவரை உறுதியான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor