வட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது.

அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது.

கூகுள் பிளே பீட்டா திட்டம்
கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டில் வரலாம் என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார்(Search) மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

புதிய அம்சம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம்.

இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும்.

இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Recommended For You

About the Author: webeditor