எதிர்காலத்தில் எடையின் அடிப்படையில் முட்டைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டுக்கோழி முட்டையின் எடை சுமார் 65 கிராம் என்பதால் 20 இந்திய முட்டைகள் தேவைப்படும் இடத்தில் பன்னிரண்டு உள்ளூர் முட்டைகள் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவே ஒரு கிராமின் விலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் முட்டைகளை வாங்க மக்கள் தூண்டப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு முட்டைகள் தொகை நேற்று (04) இரவு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை 04 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார் .