யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை அடுத்து பிரதம விருந்தினர் அவர்கள் விளையாட்டுப் போட்டியினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனை அடுத்து கொடியேற்றம் இடம்பெற்று, தொடர்ந்து அணிநடை நிகழ்வுடன் இல்ல மெய்வல்லுனர் போட்டிய ஆரம்பமானது.
கல்லூரியின் முதல்வர் திருமதி தேவராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கல்லூரியில் முன்னை நாள் அதிபர் புஷ்பராணி பஞ்சாட்சரம் அவர்களும், சிறப்பு அதிதியாக வலிகாமம் கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் கே. சிவகரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.