கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகியுள்ளன

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களை தாக்கும் மாரடைப்பு
இத்தகவலை கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே மக்கள் கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor