பிரான்சில் ,மலைபோல் குவியும் குப்பைகள்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்ற வழிவகை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த மசோதாவுக்கு பிரான்ஸ் மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களும் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தலைநகரான பாரிஸில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

மேலும், நகரின் முக்கிய சாலைகள், வீதிகள் குப்பைகளால் நிரம்பி துர்நாற்றம் அடிக்கிறது. சுமார் 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Recommended For You

About the Author: webeditor