இலங்கையில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கிராலர் கிரேன் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது.
750 தொன் தூக்கும் திறன் கொண்ட இந்த கிரேன் கடந்த வாரம் இலங்கையில் இறக்கப்பட்டுள்ளது. முதலில் இக் கிரேன் மன்னாரில் உள்ள ஹிருராஸ் காற்றாலை மின் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
1000 தொன் உதிரிபாகங்களைக் கொண்ட கிராலர் கிரேன் ஒரு நாளில் HIP மூலம் இறக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி நிலையம்
ஜேர்மன் நிர்மாணிக்கப்பட்ட Liebherr பிராண்ட் கிரேன் ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு தற்போது சிவில் திட்டங்களுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி நிறுவனமான Wind Force PLC, ஆனது மன்னாரில் 15MW காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் வவுணதீவில் 10MW சூரிய மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது.