கொழும்பில் இருந்து மூன்று லட்சம் எரிபொருட்களை ஏற்றி வந்த புகையிரதத்தில் தீ விபத்து

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரம் இன்று சனிக்கிழமை காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு இருபது நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் 188வது மைல் கல் அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ள நிலையில் புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததையடுத்து புகையிரத்தை நிப்பாட்டியதுடன் பாரிய விபத்தில் இருந்து புகையிரத்தை பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதனை அடுத்து மட்டக்களப்பு புகையிரத நியைத்தில் இருந்து மற்றுமொரு புகையிர இயந்திரத்தை கொண்டுவந்து தீப்பிடித்த புகைதிரத்துடன் எரிபொருள் அடங்கிய கொள்கலன்களையும் மட்டக்களப்புக்கு மதியம் 12.00 மணியளவில் கொண்டுசென்றனர்.

Recommended For You

About the Author: webeditor