கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலும் மழை பெய்வதால் மண்சரிவு, பாறைகள் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபாய மாவட்டங்கள்
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அபாய மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, நீர்த்தேக்கங்கள், நிலச்சரிவுகள்,மலைகள் அல்லது செங்குத்தான பாறைகள் உள்ள சூழலில் வசிக்கும் மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.