பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 13 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதிவரை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் கல்வி ஆண்டின் இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் இடம்பெறவுள்ளன.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.