பெரும்போக நெல் விளைச்சல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

நடப்பு பெரும்போக பருவத்தில் ஒரு ஹெக்டயாருக்கு நெல் விளைச்சல் 3.1 மெட்ரிக் தொன் அளவிலான விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

2021 ம் ஆண்டின் பெரும்போகத்திற்கு முன்னர், நாட்டில் ஒரு ஹெக்டயாருக்கு அறுவடை செய்யப்பட்ட நெல் அளவு 4.1 முதல் 4.5 மெட்ரிக் தொன்கள் வரையான உயர்விளைச்சல் கிடைத்து வந்தது மேலும், இரசாயன உரங்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டதன் மூலம், 2021 பெரும் ​போகத்தில் ஹெக்டயாருக்கு நெல் விளைச்சல் மேலும் 2.1 மெட்ரிக் தொன்னாகக் குறைந்தது.

இரசாயன உரங்கள்
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இரசாயன உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், இலங்கையில் ஒரு ஹெக்டயாருக்கு அறுவடை செய்யப்படும் நெல்விளைச்சலின் அளவு 3.1 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த விளைச்சல் போதாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெற்செய்கைக்கான பத்தாண்டுத் திட்டம்
இதன் காரணமாக விவசாய அமைச்சும் விவசாயத் திணைக்களமும் இணைந்து இந்நாட்டில் நெற்செய்கைக்கான பத்தாண்டுத் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளன.

இதன்படி, அடுத்த 03 வருடங்களில் ஹெக்டயார் ஒன்றின் நெல் விளைச்சலை 4.5 மெற்றிக் தொன்களாகவும், 05 வருடங்களில் 5.2 மெற்றிக் தொன்களாகவும், 10 வருடங்களில் 5.5 மெற்றிக் தொன்களாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor