பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவலை

பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாட்டு பொறிமுறைகள் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து விழிப்புணபுர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாற்றமடைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெருந்தொற்று மற்றும் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் வாழ்க்கை பாரிய விதத்தில் மாற்றமடைந்தது, தொழில்கள் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகள் மாற்றமடைந்தன எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor