ரெயின்போ பாலர் பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஷரீப் பௌண்டஷன் தவிசாளரும் தொழிலதிபருமான கலாநிதி ஷரீப் ஹக்கீம் கலந்து சிறப்பித்தார்.
பின்னர் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.பிரதம அதிதிகளின் உரை பரிசளிப்பு வைபவம் என தொடர்ச்சியாக இடம்பெற்றன.
தற்காலத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை தொடர்பிலும் பெற்றோர்கள் மத்தியில் வழங்கி இருந்தார்.
அத்துடன் விடுகதைகளும் விடைகளும் ஹிந்தி பாடலுக்கான நடனம் விநோத உடை போட்டி என்பன இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.