இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகமானப் பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், நாளைய தினம் (13.02.2023) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் உண்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கைவிடும் நிலைமை
அத்துடன், ஒவ்வொரு முறை உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், உருளைக்கிழங்கு இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தகக்து.