எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு
தேர்தல் நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தேர்தலை நடாத்துவதில் எவ்வித தடையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமை தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும், உள்ளூராட்சி மன்றங்கள் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.