சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பேரழிவு காரணமாக சாத்தியமான அனைத்து துறைகளிலும் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சராக தற்போதைய ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் 2022 ஆம் ஆண்டை விட தமது மாளிகைகள் மற்றும் வாகனங்களின் பராமரிப்புக்காக அதிக நிதியை ஒதுக்கியமை குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளது.