இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்பில் நடைபெற்றிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், பூட்டான், நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் அமைச்சர்களே சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஹர்த்தால் அனுஷ்டிப்பு
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன் இன்றைய தினத்தை கறுப்புநாளாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
பாரிய பொருளாதார அரசியல், குழப்பநிலைகள் நாட்டில் நிலவுகின்ற நிலையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் விமர்சனத்தையும் விசனத்தையும் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.