சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தட்டுபாடு நிலவுகின்றது.
இந்த நிலையில் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை இன்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 20 ஆம் திகதி முட்டைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதன்படி வெள்ளை முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவும், சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டது
நிர்ணய விலைக்கு அதிகமாக முட்டை விற்பனையில் ஈடுபடும் சாதாரண வர்த்தக நிலையமாயின் ஒரு இலட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் நிறுவனம் ஒன்றாயின் 5 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
இதேவேளை உள்நாட்டில் முட்டையின் உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் முட்டையின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.