கொள்கை வட்டி வீதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்ட பொருளாதாரத்தின் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, நேற்று நடைபெற்ற நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50% மற்றும் 15.50% என்ற தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
அத்துடன் உத்தியோகபூர்வ கையிருப்பு வீதம் 4.00% ஆக மாறாமல் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.