வேலன் சுவாமி கைதிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள இந்து சமய தொண்டர் சபை!

தவத்திரு வேலன் சுவாமிகளின் கைதை இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டித்துள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தவேளை அறத்தின் வழி அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் சைவசமயத் துறவியும் சிவகுரு ஆதீன குருமுதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகளை காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கைது செய்ததினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனநாயக வழியில் அமைதியாக போராட்டம் நடாத்துவது மனிதனின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் ஒரு சைவத்துறவியான குருமுதல்வரை கைது செய்த விடயம் என்பது எமது சைவர்களை அவமதித்ததாகவே அமையும்.

அறத்தின் வழி செயற்படும் சைவத்துறவியை கைது செய்தது சைவமக்கள் மனதில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் சம்மந்தப்பட்ட தரப்பினர் நிதானத்துடன் செயற்படல் வேண்டும்.

மேலும் இல்லாத பட்சத்தில் மேன்மேலும் சைவர்களிடையே ஆத்திரத்தினையும் ஊட்டுமே தவிர ஒரு சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வழிகோலாது’ என்றுள்ளது.

Recommended For You

About the Author: webeditor