உலகின் மிகப் பெரும் இரத்தினக்கல் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள இரத்தினக்கல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரத்தினக்கல்லை எடுத்துச் சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனதால் கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor