இலங்கையில் புதிய கோவிட் அலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சின் கோவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.
சுகாதார பழக்க வழக்கங்கள்
கோவிட் காரணமாக இரண்டாண்டுகள் பாதிப்புக்களை எதிர்நோக்கியதனை மக்கள் மறந்து விட்டார்கள்.
ஒரு மீற்றர் இடைவெளி, கை சுத்திகரிப்பான் பயன்டுத்தல், அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்க வழக்கங்களை பலர் மறந்து விட்டார்கள்.
சுகாதார பழக்க வழக்கங்களை கைவிடுவதனால் மீளவும் நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது என எச்சரித்துள்ளார்.