தேர்தல் கடமைகளில் பொலிசார் ஈடுபடுத்தப்படுவதில் சிக்கல்!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது கடமைகளில் ஈடுபடுவதில் நெருக்கடி நிலை காணப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட காலத்தில் பொலிஸாருக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு பில்லியன் ரூபா பணம் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன , தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவது சிரமமானது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் அண்மையில் நடாத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் என்பதனால் பல்வேறு குழுக்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல்களை தடுக்க கூடுதல் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஆளணி வளம் 68000 மாக காணப்பட வேண்டும் என்ற போதிலும் தற்பொழுது 60000 பேர் மட்டுமே கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வாக்கு கேட்டு செல்லும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நேரிடும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor