பிரேசில் தலைநகரில் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி!

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் இதே போன்ற முயற்சிகளை இலங்கையும் வெகுகாலத்திற்கு முன்பு அனுபவித்தது.

ரணில் கண்டனம்
இத்தகைய விரோதங்கள் கண்டிக்கப்படுகின்றன. மேலும் இந்த மோதல் நேரத்தில் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் நாங்கள் ஒன்றித்து நிற்கிறோம்.

ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் என்பன அனைத்து குடிமக்களால் உலகளவில் மதிக்கப்படுவது கட்டாயமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் போராட்டம்

பிரேசிலில் காங்கிரஸ் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக 1,200 க்கும் மேற்பட்ட வலதுசாரி கலகக்காரர்களை பிரேசில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor