வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு COVID-19 தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தி ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்,கோவிட் 19 தொற்று மீண்டும் பரவினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கோவிட் 19 அறிகுறிகள் மாறியிருப்பதில் உண்மையில்லை எனவும், நாட்டில் மேலும் புதிய மாறுபாடுகள் தோன்றவில்லை என்றும் தொற்று நோய்கள் மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.