2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சில உணவுகளை ஒழுக்கமற்ற முறையில் ஊக்குவிப்பதும்இ ஊக்குவிக்கப்படும் உணவின் மீது பெற்றோரின் ஈர்ப்பும், போசாக்கு குறைபாடு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் .
குழந்தைகளின் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களின் கொள்வனவு திறன் குறைவதும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுத்தது.
விரைவில் திரிபோஷா விநியோகம் சீராகும் என அமைச்சர் இதன் போது உறுதி அளித்துள்ளார்.