உக்ரைன் போரில் ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை ஈடுபடுத்த புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடினின் புதிய திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய நண்பர் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுவைச் சேர்ந்தவர் எவ்ஜெனி ப்ரிகோலின். துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின் நிறுவனராகவும் இருக்கும் இவர், ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு துப்பாக்கி சுடுவது உள்ளிட்ட பயிற்சிகளை கொடுத்து உக்ரைன் போரில் ஈடுபடுத்த தயார் படுத்த திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புடினின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியான வியாசேஸ்லாவ் வாக்னர் என்பவர் ப்ரிகோலினை தொடர்புகொண்டுள்ளார்.
பெண் கைதிகளுக்கு பணி
இந்த தொடர்பின் அடுத்த கட்டமாக பெண் கைதிகள் குழு ஒன்று ப்ரிகோலினை சந்தித்துள்ளதாகவும், உக்ரைனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்களாக வேலை செய்ய அவர் பயிற்சியும் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, ரஷ்ய படை வீரர்கள் எண்ணிக்கையை 15 லட்சமாக விரிவுபடுத்த அமைச்சருக்கு புடின் கூறிய நிலையில் தற்போது அவரது இந்த புதிய திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.