பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் இரண்டாவது மாதமாக உயர்ந்ததுள்ளதுடன், வேலை தேடும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து வங்கி (BoE) தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலையின்மை விகிதம் செப்டம்பர் முதல் மூன்று மாதங்களில் 3.6 சதவீதத்திலிருந்து அக்டோபர் வரையிலான மூன்று மாதங்களில் 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் உள்ள வெற்றிடங்கள், பிரித்தானியா கோவிட் முடக்கத்தில் இருந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக வருடாந்திர அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கமான ஊதியம் எதிர்பார்த்ததை விட வலுவான 6.1 சதவீதம் உயர்ந்தது.

மேலும் போனஸ் உட்பட மொத்த ஊதியம் ஆண்டுக்கு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: webeditor