உலகின் முதல் பெண் பிரதமர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவலால் எழுந்துள்ள சர்ச்சை

உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கமைய , உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமை இலங்கைக்குரியதாகும்.

தவறான தகவலால் எழுந்துள்ள சர்ச்சை
இந்நிலையில்,அரசியல்வாதியாகவும்,பலரும் இரசிக்க கூடிய நடிகராகவும் உள்ள கமல்ஹாசன் இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளமை பலர் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.

இருப்பினும், இது தொடர்பில் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதுடன்,அடுத்த வார நிகழ்ச்சியில் இதற்கு பதிலளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டார நாயக்க கணவரின் மரணத்தை அடுத்து பிரமதராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், ‘உலகின் முதலாவது பெண் பிரதமர்’ எனும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor