அமெரிக்காவில் திடீரென நீல நிறமாக மாறிய முதியவர் ஒருவரின் தோல்!

அமெரிக்காவில் நபரொருவர் கடந்த 10 ஆண்டுகளாக டையட்ரி சப்ளிமெண்ட்ஸை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்ததால் அவருடைய தோல் நீல நிறமாக மாறிவிட்டது. இதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

கடந்த சில வருடங்களில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடல் நலத்தை மேம்படுத்த அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வதால் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன.

முன்னதாக மனிதர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாக உணவு சாப்பிடுவதிலிருந்து விலகிவிட்டனர். இதனால் வயிற்றில் கோளாறு, ஒவ்வாமை என பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன.

இதை சரிகட்ட வைட்டமின் மாத்திரைகள், டயட்டரி சப்ளிமெண்ட்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு தள்ளப்படுகின்றன. இதனுடைய விளைவு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவில் ஊட்டச்சத்து வேண்டி வெறும் 10 ஆண்டுகளாக டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டு வந்த நபருக்கு ஒரு விசித்திரமான நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருடைய தோற்றம் நீல நிறமாக மாறிவிட, அவரை இணையவாசிகள் ‘பாப்பா ஸ்மர்ஃப்’ என்று குறிப்பிடுகின்றனர். இதை கேட்டால் பலரும் நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.

ஆனால் பால் கராசன் தனது தனித்துவமான தோல் நிறத்தால் தொடர்ந்து செய்திகளில் வந்து கொண்டிருந்தார்.

பல ஆண்டுகளாக டயட்டர் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டு வந்ததன் விளைவாக, அவருடைய சருமம் நீல நிறத்தில் மாறியிருப்பது தெரியவந்தது.

அவருடைய தோல் நிறத்தை பார்த்த மக்கள் வியப்படைந்தனர். அவரை நெட்டிசன்கள் உலகளவில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor