இந்த ஆண்டில் தென்பட இருக்கும் முழு சந்திரகரணம்

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.

இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

பகுதியளவான சந்திரகிரகணம்

இன்றையதினம், இலங்கையில் பகுதியளவான சந்திரக் கிரகணம் தென்படும், இருப்பினும், சந்திரக் கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும்.

இன்று, மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும்.

மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor