பிரான்ஸில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Doliprane மற்றும் Efferalgan உட்பட ஒரு நோயாளிக்கு இரண்டு பெட்டிகள் பாராசிட்டாமல் மாத்திரைகள் மாத்திரமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொது மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு இரண்டு பெட்டிகள் மட்டுமே இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் இந்த பரிந்துரையை வெளியிட்டுள்ளது.
மிகவும் பிரபலமான இந்த மருந்துகள் மருந்து சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.
குளிர்காலம் நெருங்கி வருவதால் கொரோனா தொற்று நோய் மீண்டும் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாராசிட்டாமல் பயன்படுத்துமாறு நோயாளிகளுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நோயாளிகள் உடனடி தேவைக்காக மாத்திரம் இந்த மாத்திரையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதனை தவிர்த்து தேவையற்ற முறையில் அதை சேமித்து வைக்க வேண்டாம் எனவும் மருந்து சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவான அளவு பாராசிட்டமால் வழங்கலாம் என மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.