பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சூட்சுமான முறையில் கார்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவில் நிறுத்திவிட்டு திறப்பினை எடுத்துவிட்டோமா என பல முறை சரி செய்துவிட்டு நித்திரைக்கு செல்வோர் காலையில் காரை காணாமல் அதிர்ச்சி அடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இருப்பினும், கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கார் காணாமல் போனதற்கான எவ்வித தடங்களும் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
பாரிஸ், லில், லியோன் மற்றும் மார்சே ஆகிய பகுதிகளிலேயே இந்த திருட்டு சம்பவம் அதிகளவில் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார் கடத்தல் சம்பவம் தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் பாரிசை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பிரான்ஸ் முழுவதும் பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாகவும் தங்கள் வாகனத்திற்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காரின் கண்ணாடியை கூட உடைக்காமல் காருக்குள் நுழைந்து காரை திருடிச் செல்லப்படுகிறது.
இது தொடர்பில் பலரும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் பொலிஸாரால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
திருடர்கள் நவீன கார்களை குறிவைத்தே திருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தொலைதூரத்தில் இருந்து திறக்கும் ரிமோட் போன்ற பொருட்களை இந்த திருடர்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, வாகனத்தினுள் பொருத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கணினி திரையை ஊடுரூவி அதன் மூலம் காரினை இயக்கி கதவுகளை திறந்து அங்கிருந்து எடுத்து செல்வதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அதன் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் என்பதனை பொலிஸாரால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிடப்பட்டுள்ளது.