போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய 364.8 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செலவுகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை புதுப்பிக்க மட்டுமே செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும், மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மையம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் சேதம் இந்த மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை.
பழுதுபார்க்கும் பணி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அரசாங்க விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்பின், அலுவலகங்கள் மற்றும் ஏனைய பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக பொதுமக்களின் பணத்தை செலவிட நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.