இலங்கைக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் (31-10-2022) நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கு கடந்த வாரம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் வந்தது. முன்பதிவு செய்யப்பட்ட 38 நிலக்கரி இறக்குமதியில் இதுவே முதற் தொகுதியாகும்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, (Kanchana Wijesekera) முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து மேலும் 5 நிலக்கரி இறக்குமதிகள் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனுடாக மின் உற்பத்திக்காக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி அனுப்பப்படும்.
இலங்கை மின்சார சபையினால் கடந்த ஒகஸ்ட் மாதம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தற்போது உள்ள நிலக்கரி கையிருப்பு 2022 ஒக்டோபர் இறுதி வரை மாத்திரமே போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.