யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வருகை தருவதை அறிந்த உறவுகள் இன்று (31-10-2022) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறுமையை இழந்த அவர்கள், மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்துக்குள்ளும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அங்கே பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, அரச அதிகாரிகள்,அமைச்சர், இராணுவத்தினரின் பங்குபற்றுதலோடு நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, மாவட்டச் செயலக, அலுவலகம் முன்பாக போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

Recommended For You

About the Author: webeditor