பாணின் விலை குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும்!

பாண் விலை தொடர்பான இறுதி முடிவு
பாணின் விலை தொடர்பான இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (31.10.2022) இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாணின் விலையை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஊடகங்களில் வெளியிடப்படும் விலையின் அடிப்படையில் கோதுமை மா கிடைக்கப் பெறுவதில்லை.

கோதுமை மா விலை
320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மா தற்பொழுது 298 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கருத்திற் கொண்டு பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இன்றைய தினம் பெரும்பாலும் பாணின் விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor