தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து நேற்று முன்தினம் (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தொடருந்து ஹட்டன் கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும் ரொசல்ல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
தொடருந்து சேவைகள் பாதிப்பு
இதனால் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்புக்குள்ளானதுடன் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இந்நிலையில் தொடருந்து திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து தொடருந்து பாதையினை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதேநேரம் நேற்று நானுஓயாவில் இருந்து புறப்படவிருந்த இரண்டு தொடருந்து பயணங்கள் தடம்புரள்வு காரணமாக இரத்தச்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.